News

7 ஈரான் நாட்டவர்கள் கைது



இலங்கையின் தெற்கே, தெவுந்தரைக்கு தெற்குப் பகுதியில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் பயணித்ததாகக் கூறப்படும் 7 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சந்தேகநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளில் வெளியான தகவல்களின் படி,

ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை கடத்திச் சென்றபோது கைப்பற்றப்பட்ட கொடியற்ற படகில் இருந்த 07 பேரும் ஈரான் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button