News

சர்வதேச டேக்வோண்டோ அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த  கலகெதரயின் இளம் வீரர் அர்ஹம் இஷாக் ஜவான்!

சர்வதேச டேக்வோண்டோ அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த  கலகெதரயின் இளம் வீரர் அர்ஹம் இஷாக் ஜவான்! வெண்கலப் பதக்கம் வென்று  நாடு

திரும்புகிறார்.
—————————————————–
இந்தியாவில் நடைபெற்ற முதலாவது சர்வதேச திறந்த டேக்வோண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் (1st India International Open Taekwondo Championship 2026), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டு, தனது திறமையை உலக அரங்கில் பறைசாற்றியுள்ள கண்டி – கலகெதரயைச் சேர்ந்த இளம் வீரர் அர்ஹம் இஷாக் ஜவான் குமித்தே (#Kyorugi  – சண்டைப்பிரிவு) பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை (Bronze Medal) வென்று நாட்டுக்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.



இந்தியாயிவன், புனேவில் உள்ள ஸ்ரீ சிவசத்ரபதி விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இத்தொடரில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். சர்வதேச டேக்வோண்டோ சம்மேளனம் , இந்திய டேக்வோண்டோ மற்றும் ஆசிய டேக்வோண்டோ யூனியன் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஒலிம்பிக் தரவரிசை புள்ளிகளைப் பெறும் நோக்கில் பலத்த போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பல்வேறு டேக்வோண்டோ கழகங்களைச் சேர்ந்த பல திறமையான வீரர்கள் இத்தொடரில் களமாடியிருந்தனர். 

கடுமையான போட்டி நிறைந்த இச்சமரில், இலங்கையிலிருந்து பங்குபற்றிய வீரர்களில்  6 மாணவர்கள் மாத்திரமே பதக்கங்களை வென்று தங்களின் திறமையை நிரூபித்தனர்.

குறிப்பாக, இவர்களுள் இரண்டு மாணவர்கள் கண்டி – கலகெதரயைச் சேர்ந்த ‘JM TKD SPORTS’ கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நமது ஊருக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். இக்கழகத்தின் திறமையான வீரரான அர்ஹம் இஷாக் ஜவான், தனது விடாமுயற்சியாலும் சிறந்த திறமையாலும் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைத் திருநாட்டின் தேசியக் கொடியை உயரமாகப் பறக்கவிட்டுள்ளார்.

இந்தச் சிறப்பான வெற்றிக்கு முழுக்க முழுக்கக் காரணமானவர், ‘JM TKD SPORTS’ கழகத்தின் பயிற்றுவிப்பாளரும், சர்வதேச டேக்வோண்டோ நடுவருமான கலகெதரயைச்  சேர்ந்த  திரு.  ஜெஸீர் மொஹமட் ஆவார். அவரது சீரிய வழிகாட்டலும், கடினமான பயிற்சிகளுமே இந்த இளம் வீரர்களை சர்வதேச மேடையில் ஜொலிக்கச் செய்துள்ளன.

வெற்றி பெற்றுள்ள இளம் வீரர் அர்ஹம் இஷாக் ஜவான், கண்டி – கலகெதரயைச் சேர்ந்த இஷாக் ஜவான் மற்றும் ஹஸ்மத் ஷைலா தம்பதியினரின் அன்புப் புதல்வன் ஆவார். 

பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் தொடர்ச்சியான ஊக்கமே இத்தகைய பிரம்மாண்ட வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.

போட்டிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு இலங்கை டேக்வோண்டோ அணியினர் இன்று மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உறவினர்கள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து அமோக வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் கீர்த்தியை சர்வதேச அரங்கில் உயர்த்திய இளம் வீரர் அர்ஹம் இஷாக் ஜவான் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கவும், நமது நாட்டின் திறமையான வீரர்களை எதிர்காலத்தில் உருவாக்குவதற்காக உழைத்து வரும் பயிற்றுவிப்பாளர் திரு.  ஜெஸீர் மொஹமட் அவர்களின் பயணம் மென்மேலும் சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button