News

அரபுக் கல்லூரி அதிபர் மற்றும் பிரபல சன்மார்க்க அறிஞருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஹஸ்ரத் அவர்களது மறைவு கவலை தருகிறது


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

முன்னாள் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவரும் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபரும் பிரபல சன்மார்க்க அறிஞருமான எனது நண்பர் உஸ்தாத் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது மறைவு குறித்த துயரச் செய்தி அதிர்ச்சியைத் தந்தது.

கடந்த 25.12.2024 அன்று எனக்கு அவர் அழைப்பை எடுத்து எனது அப்பா ஹபுகஸ்தலாவை பெரிய ஆலிம் ஸாஹிபு உத்மான் லெப்பை அவர்கள் பற்றிய எனது ஆக்கம் ஒன்றையும் அதில் இடம்பெற்ற இலங்கை அரபு மதரஸாக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பற்றியும் பாராட்டி பேசியதோடு புத்தளம் காஸீமிய்யா மத்ரஸாவின் தோற்றம் பற்றிய சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டதோடு சில வரலாற்று ஆவணங்களையும் வட்ஸப் ஊடாக அனுப்பியும் வைத்திருந்தார்.

அவரது கனிவான பேச்சும், பணிவான பண்புகளும், புன்முறுவலும், தன்னடக்கமும், தலைமைத்துவப் பண்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்திருந்த விடயங்களாகும்.

அந்த தொலைபேசி உரையாடலின் போது  ஸில்ஸிலதுல் காஸிமிய்யீன் மற்றும் அவரது பிள்ளைகள் (குறிப்பாக அப்துல்லாஹ் மற்றும் அம்மார்) பற்றியும் கேட்டு அறிந்து கொண்டேன், அந்த அழைப்பு தான் எனக்கு அவர் எடுத்த இறுதி அழைப்பாக இருக்கும் என நினைக்கின்ற போது விபரிக்க முடியாத சோகம் ஆட் கொள்கிறது.

அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் வேட்பாளர் தேர்வின் பொழுது புத்தளம் மாவட்ட பிரதிநிதி ஒருவரை பொது அணியில் வெற்றி பெறச் செய்வதில் இம்முறை எழுந்துள்ள சவால்கள் குறித்தும் என்னோடு கலந்தாலோசனை செய்தார்.

தேசிய ஷூரா சபையை ஸ்தாபிப்பது தொடர்பான பல உரையாடல்களை நாம் மேற் கொண்டதோடு அவரது
ஒருங்கிணைப்பில் புத்தளம் நகர பெரிய பள்ளி வாசலில் ஒரு சந்திப்பையும் 2014 காலப்பகுதியில் மேற் கொண்டோம்.

சமூக தேசிய விவகாரங்கள் தொடர்பிலான கலந்தாலோசனை பொறிமுறைகளில் அப்துல்லாஹ் மஹ்மூத் ஹஸ்ரத் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கும் ஒரு தனியான கெளரவம் இருந்தமை குறிப்பிடத் தக்கது, அந்த உறவு தான் எம்மை சுமார் மூன்று தசாப்தங்களாக ஒன்று சேர்த்திருந்தது எனலாம்.

புத்தளம் காஸிமிய்யா மற்றும் மதீனா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பட்டதாரியான அவர் சுமார் 35 வருட காலம் சமூக சன்மார்க்க பணிகளில் தீவிரமாக தன்னை அர்பணித்துக் கொண்டவர்.

அவரது வாழ்வு மற்றும் பணிகள் குறித்து இந்த செய்தியில் நினைவு கூர்வது சிரமமான பணியாகும் என்பதனை அறிவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது குற்றம் குறைகளை மன்னித்து, நல்லமல்கள், நற்பணிகளை அங்கீகரித்து உயரிய சுவன வாழ்வை தருவானாக!

அவரது பிரிவால் வாடும் மனைவி மக்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் பிரிவைத் தாங்கும்  மனவலிமையை மற்றும் சகிப்புத் தன்மையை தருவானாக!

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 14.01.2025

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button