News

இப்போது சிரமப்பட்டு மலையேற வேண்டும்,அங்கேயும் பல சவால்களை சந்திக்க நேரிடும்

தேசிய மக்கள் சக்தி பல தடைகளை தாண்டி மலையடிவாரத்தை வந்தடைந்துள்ளதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இப்போது சிரமப்பட்டு மலையேற வேண்டும்,அங்கேயும் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்கிறார்.

இக்கட்டான சூழ்நிலையில் பாம்பு, மரப்பட்டை போன்றவற்றை சாப்பிட்டு சீனா இன்று உலகில் முதலிடம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் மலை ஏறிக்கொண்டு அனைத்தையும் வசதியாகச் செய்ய முடியாது, தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க, நாட்டு மக்கள் மாத்திரமன்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே மட்டத்தில் இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொழும்பில் தங்குவதற்கு இடமில்லாமல், பையை தோளில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்து வருவதாக கூறினார்.

மாதிவெலயில் உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை வாகனம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

Recent Articles

Back to top button