வீடொன்றினுள் தங்கி இருந்த 60 வயது நபரையும் தன் மனைவியையும் கூரிய ஆயுதத்தால்
கணவன் தாக்கியதில் மனைவி படுகாயம் – 60 வயது நபர் உயிரிழப்பு

மாதம்பை பழைய நகரில் வீடொன்றில் இருந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் பெண்ணின் கணவரின் கூரிய ஆயுதத் தாக்குதலில் படுகாயமடைந்து ஹலவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மாதம்பை பழைய நகரைச் சேர்ந்த துஷார தில்ருக்ஷா என்ற 60 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர், கத்தியால் குத்திய சந்தேகநபரின் மனைவியுடன் சில காலமாக உறவில் இருந்ததாகவும், சம்பவத்தன்று இறந்தவர் சந்தேகநபரின் மனைவியுடன் மாதம்பை பழைய நகரம் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்திற்குள் புகுந்த சந்தேக நபர் தனது மனைவி மற்றும் குறித்த நபரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் வெட்டிக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், மாதம்பை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


