News

இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் பிரபல தமிழ் ஊடகம் விகடன் இன் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டது

இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழின் பிரபலமான ஊடகமாக திகழ்வது விகடன். பிரபல தனியார் ஊடக நிறுவனமான விகடன் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், அவர்களது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக சித்திரம் வரையப்பட்டிருந்தது.

அந்த சித்திரத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதாக கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக-வினர், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார்.

இந்த சூழலில், அண்ணாமலை புகாரின் அடிப்படையில் விகடன் செய்தி நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை சித்தரித்து வரையப்பட்ட கார்ட்டூனுக்கு எதிராக  விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன் பாரத பிரதமர் உலகத் தலைவர் நரேந்திர மோடி அவர்களை அவதூறாக சித்தரித்த விகடன் டிஜிட்டல் சைட் முடக்கப்பட்டது. நீதி வெல்ல வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், பல பாஜக-வினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button