News
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இன்னும் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியது காவல்துறை

பாத்தாள உலக கும்பலின் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு தேடப்படும் செவ்வந்தி யின் மேலும் சில புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
995892480V என்ற தேசிய அடையாள இலக்கம் கொண்ட இஷார செவ்வந்தி, 25 வயதுடையவர் எனவும் அவர் 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகம என்ற முகவரியில் வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்கண்ட சந்தேக நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண்கள்
071 – 8591727
071 – 8591735



