News

பாராளுமன்றத்தில் பொய் கூறும் சிறப்புரிமையும் நீக்கப்பட வேண்டும்

வாகன அனுமதிப்பத்திரம் நீக்கப்பட்டது போன்று பாராளுமன்றத்தில் பொய் கூறும் சிறப்புரிமையும் நீக்கப்பட வேண்டும் என நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எம்.பி.க்கள் சிறப்புரிமை என்ற போர்வையில் பொய் சொல்கிறார்கள் என்றும் எம்.பி. குறிப்பிட்டார்.

“இப்போதெல்லாம் தேசிய பாதுகாப்பை அரசியலாக்க முயல்கிறார்கள். தேசிய பாதுகாப்பு தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, நிலையான வளர்ச்சி இல்லாத இடத்தில் தேசிய பாதுகாப்பு இல்லை, ஒரு குரங்கு பாய்ந்து நாடு இருளில் மூழ்குமானால், தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்கள் பற்றி நாங்கள் இன்னும் பேசுகிறோம். அன்றைய நிகழ்வுகளின் தொடர்ச்சியை ஆய்வு செய்திருந்தால், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது.இறுதியில் தேசிய பாதுகாப்பு தகர்ந்து போயிருக்காது என்றார்.

Recent Articles

Back to top button