News
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு அதிகரிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் சுகாதாரக் கொள்கை நிறுவகம் (IHP) நடத்திய ஆய்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னிலையில் உள்ளார். அவருக்கு 43 சதவீத ஆதரவு உள்ளது
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 30 வீதமான ஆதரவு இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக சுகாதார கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடைத்த ஆதரவு 20 வீதமாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்துள்ள வேட்பாளருக்கு 7 வீத ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.