News
அரசாங்க வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற மத்திய மாகாண சபையின் (ஐக்கிய தேசியக் கட்சி) முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கைது

350,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்தில் மத்திய மாகாண சபையின் (ஐக்கிய தேசியக் கட்சியின்) முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டொன் ஹரிந்த சானக அய்லபெரும, கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கண்டி பகுதியில் கைது செய்யப்பட்டார். அரசாங்க வேலைகளை வழங்குவதாகக் கூறி தலா இரண்டு லட்சம் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்களைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம் 28 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் விசாரணைகளை நடத்தி வருகிறது.



