News
சாரதியின் தூக்கம் காரொன்றை வீடொன்றின் கூரை மீது நிறுத்தியது – உள்ளிருந்த பெண் காயம்
மொரவக்க – அலபதெனிய பிரதேசத்தில் காரொன்று வீதியை விட்டு விலகி, வீடொன்றின் கூரை மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த பெண் காயமடைந்துள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெலுவயிலிருந்து மொரவக்க நோக்கி சென்றுகொண்டிருந்த கார், சாரதியின் தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பாய்ந்து, வீடொன்றின் கூரை மீது விழுந்துள்ளது.
கார் விழுந்ததில் அவ்வீட்டின் கூரையும் சேதமடைந்துள்ளது.