News
இலங்கை கேடட் அதிகாரி மொஹமட் அனீக், பிரித்தானியாவின் Royal Military Academy இன் அதிகாரியாக நியமனம்.
இலங்கை கேடட் அதிகாரி மொஹமட் அனீக், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள புகழ்பெற்ற Royal Military Academy Sandhurst இல் 44 வார கடுமையான பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து அதன் உத்தியோகபூர்வ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, அதிகாரி கேடட்களுக்கான தீவிர பயிற்சியின் உச்சக்கட்டத்தை குறிக்கும் மரியாதைக்குரிய Sandhurst பாரம்பரியம், ஒகஸ்ட் 9 ஆம் திகதியன்று நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 209 அதிகாரி கேடட்கள் பங்கேற்றனர், அவர்கள் அனைவரும் உலகின் மிகவும் சவாலான இராணுவப் பயிற்சித் திட்டங்கள் வழங்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.