அடிக்கடி இமோஜி (Emoji) அனுப்புவது உறவுகளை மேம்படுத்தும் என டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்யில் தகவல் வெளியிடப்பட்டது

அடிக்கடி இமோஜி (Emoji) அனுப்புவது உறவுகளை மேம்படுத்தும் என அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
வட்ஸ்சப் (whatsapp), டெலிகிராம் உள்ளிட்ட அரட்டை (Chat) செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த செயலிகளில் ஒருவருடன் உரையாடுவதற்கும் செய்திகளை அனுப்பும் போதும் எழுத்துகளுடன் இமோஜி குறியீடுகளை அதிகம் பயன்படுத்தப்படுத்துவது வழக்கமாகவுள்ளது.
அந்தவகையில் ஒருவருடனான உரையாடலில் இமோஜிக்களை அடிக்கடி பயன்படுத்தும்போது உறவுகள் மேம்படுவதாகவும் அந்த நபருடன் உறவில் நெருக்கம் ஏற்படுவதாகவும் புதிய ஆய்வு கூறுகிறது.
இது உணர்ச்சிகளின் சரியான வெளிப்பாடாக இருப்பதால் எதிர் நபரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு பற்றிய ஆய்வாளரான யூன் ஹு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது



