News
கண்டி, பேராதனை வீதி அழகு நிலையம் ஒன்றில் 7 பெண்கள் மயங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்.

கண்டி, பேராதனை வீதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, மின் உற்பத்தி பொறி (ஜெனரேட்டர்) மூடப்பட்ட இடத்தில் இயக்கப்பட்டதால், நச்சு வாயு பரவி 7 பெண்கள் மயங்கி விழுந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது. குளிரூட்டி (ஏ/சி) இயங்கிக் கொண்டிருந்தபோது, மின் உற்பத்தி பொறியை இயக்கியதால் வெளியான நச்சு வாயுவே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் அழகு நிலைய ஊழியர்கள், மற்றவர்கள் வாடிக்கையாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வட்டாரங்களின்படி, தற்போது அனைத்து நோயாளிகளும் சுகமடைந்த நிலையில் உள்ளனர்.

