News

கோட்டாப ராஜபக்ச ஆட்சிக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய முயற்சித்தார்… ஆனால் அவர் குடும்பத்தினரால், குறிப்பாக ராஜபக்ஷ மகன்களால் அழிக்கப்பட்டு விட்டார் ; திலீத் ஜெயவீர

தான் குடும்ப அரசியலுக்கு எதிரானவர் என்றும், அதனால் தான் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சித்ததாகவும் சர்வஜன பலய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம தொகுதியில் உள்ள ஹாபிடிகம பிரிவில் சர்வஜன சபையை அமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தெளிவான திட்டத்துடனேயே நாம் அரசியலுக்கு வந்தோம். வேறு எந்த அரசியல் நோக்கமும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட நோக்கமும் இல்லை.

ஏனெனில், நாம் அரசியலில் இருந்து எதையும் பெற வந்தவர்கள் அல்ல. நாம் அரசியலுக்கு வந்தது ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காகவே.

இப்போது பொதுத் தேர்தலின்போது, எங்களுக்கு ஒரு துணிச்சலான எதிர்க்கட்சி தேவை என்று கூறினோம். பயமின்றி மக்களின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி, மக்களுடன் பகிர்ந்து, தேவையான தருணங்களில் ஆட்சியாளர்களின் சரியான முடிவுகளை ஆதரித்து, ஆனால், இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது நடந்துகொண்ட விதத்தில் நடந்துகொள்ளாமல், நேர்மறையான உரையாடலில் ஈடுபடுவதற்காகவே நாம் எங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்தோம்.

ஜேவிபி போல எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியலில் நாம் ஈடுபட மாட்டோம் என்று கூறினோம்.

குறிப்பாக, கடந்தகால அரசியலில் இருந்த குடும்ப அரசியலுக்கு எதிராக நின்றவன் நான். ஊழலுக்கு எதிராக நின்றவன். தந்தையிடமிருந்து மகனுக்கு அரசியல் செல்வதை எதிர்த்தவன். அதற்காகவே எனது முழு பலத்துடன் தொடர்ந்து போராடியவன். அதனால்தான் ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவை தேர்ந்தெடுத்து அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாம் நினைத்தோம்.

உண்மையில், அவர் தனது எளிய வீட்டில் இருந்து, பாதுகாப்பு வீரர்களை அகற்றி, அலுவலகங்களில் புகைப்படங்களை அகற்றி, மற்றவர்கள் பொய்யாக செய்தவற்றை உண்மையாக செய்ய முயற்சித்தார்.”

கோட்டாபய ராஜபக்ஷ உண்மையாகவே சரியான விஷயங்களைச் செய்ய முயன்றார் என்று கூறினார். ஆனால், அவர் தனது குடும்பத்தினரால், குறிப்பாக ராஜபக்ஷ மகன்களால் அழிக்கப்பட்டுவிட்டார் என்றும் அவர் கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button