இவ்வாண்டு, இலங்கையின் பழமையான கூட்டு நிறுவனங்களில் ஒன்றான டெல்மெஜ் குழுமம் அதன் 175வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

1850ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, தனது தயாரிப்புக்களின் தரத்தை பேணி வருவதன் மூலம் டெல்மெஜ் ஒரு நம்பகமான வர்த்தகம் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது.
1850 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ரீட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ் வியாபாரத்தில், 1865 ஆம் ஆண்டு டெல்மெஜ் சகோதரர்கள் இணைந்ததையடுத்து, இதன் வளர்ச்சி தொடங்கியது.
அதன்பின்பு, இந்தக் குழுமம் நுகர்வோர் பொருட்கள், சுகாதார சேவைகள், வாழ்வியலுடன் தொடர்புடைய பொருட்கள், மின்சாதனங்கள், குழாய்கள் மற்றும் பொருத்துகள், கப்பல் சேவைகள், சுற்றுலா மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னை விரிவுபடுத்தியது.
2011ஆம் ஆண்டு, 55 உபநிறுவனங்களைக் கொண்ட வல்லிபெல் ஒன் பிஎல்சி (Vallibel One plc) நிறுவனம் டெல்மெஜ் குழுமத்தின் உரிமையை பெற்றது.
தற்போது, டெல்மேஜ் குழுமம் இறக்குமதி, ஏற்றுமதி, விமான சேவைகள், சுற்றுலா, மின்சாரம், நீர்க்குழாய் பாகங்கள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
டெல்மேஜ் சோயாமீட், டின்மீன், நூடுல்ஸ், பாஸ்தா, தேயிலை, உப்பு மற்றும் மோதா ஜெல்லி உள்ளிட்ட முன்னணி தயாரிப்புகள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
மிகச் சிறந்த மேலாண்மையுடன், டெல்மெஜ் குழுமம் தற்போது தனது ஆதிக்கத்தை கீழ்க்கண்ட துறைகளில் விரிவுபடுத்தியுள்ளது.
* Delmege Consumer
* Delmege Interior Decor
* Delmege Grip Furniture
* Delmege Energy (Shell Lubricants)
* Delmege Shipping
* Delmege Events
* Delmege Building Products
* Delair Travels
* Delmege Insurance Brokers
* Delmege Tours
* Delmege Healthcare
இலங்கையைத் தாண்டி, குறிப்பாக கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான சேவைகள் மற்றும் சுற்றுலா சேவைகளில் டெல்மேஜ் குழுமம் தனது கூட்டாண்மையை விரிவுபடுத்தி வலுவான இணைப்புகளை உருவாக்கியுள்ளது.
டெல்மெஜ் குழுமத்துக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்! இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் உயர்தரமான பொருட்களுடன், இன்னும் பல ஆண்டுகள் முன்னேற்றம் காண எங்கள் நல்வாழ்த்துக்கள்!



