News
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டை எட்டியது என ஜனாதிபதி அறிவிப்பு

பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் ஆகியவற்றை இரத்துச் செய்வது தொடர்பாக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.
அதேபோல் GSP+ வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற அரசாங்கம் நிலைப்பாட்டில் உள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

