News
இனிமேல் பாவிக்க முடியாது என பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டிருந்த 9 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டிருந்த 9 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் பழுதுபார்ப்பு பணிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தொழில்நுட்ப வல்லுநர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்தப் பேருந்துகள் 5000 கிலோமீட்டர் குறுகிய தூர சேவைகளில் பயன்படுத்தப்பட்ட பின்னர், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.





