News

ரணிலின்றி வழக்கு ஆரம்பம்-  300 சட்டத்தரணிகள் களத்தில்- தேவைப்பட்டால் Zoom தொழில்நுட்பம் பாவிக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான நீதிமன்ற விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் சற்று முன்னர் தொடங்கியது. ரணில் விக்கிரமசிங்க இன்றியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜெயசூரியா, அலி சப்ரி மற்றும் வழக்கறிஞர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜராகின்றனர். மேற்படி சட்டத்தரணிகளுடன், சுமார் 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் உள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஸூம் தொழில்நுட்பம் மூலம் தொடங்கியது.

திரு. விக்ரமசிங்க சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உபுல் ஜெயசூரிய, அலி சப்ரி மற்றும் சட்டத்தரணி குழு ஒன்று ஆஜரானார்கள்.

சட்டமா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button