News

வீடொன்றினுள் இளம் கணவனும் மனைவியும் கூர்மையான ஆயுதங்களால் வெ*ட்டிக் கொ*லை செய்யப்பட்ட சம்பவம் பதிவு #ஹங்கம பொலிஸ் பிரிவு

ஹூங்கம – வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். 

எவ்வாறாயினும் தம்பதியினர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று (7) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button