News
மனோ, ரிஷாட் , ஹக்கீம் உள்ளிட்ட சிறுபான்மை தலைவர்களை இன்று ஜனாதிபதி சந்திக்கிறார்.

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு முன்னனி , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களை இன்று ஜனாதிபதி சந்திக்க உள்ளதாக தமிழ் முற்போக்கு முன்னனியின் முக்கியஸ்தர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள “ஶ்ரீ லங்கா டே” தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக குறித்த முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.



