News
அரநாயக்க, அம்பலாங்கந்தை மண் சரிவு அனர்த்தத்தில் 120 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
120 பேரில் 20 குழந்தைகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு காரணமாக காணாமல் போனவர்களை மீட்பதற்கு மீட்புப் பணியினர் குறித்த பகுதிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
அதேபோல் அநுராதபுரத்தில் பௌத்த பிரிவெனாவொன்றிலுள்ள 100இற்கும் அதிகமான பிக்குகள் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



