News

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குப் சஜித்தே பொருத்தமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதால் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, சஜித் பிரேமதாசவிற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

“கடந்த இரண்டு தேர்தல்களில் மாத்திரமே அவருக்கு ஆதரவளிப்பதாக நான் முன்னர் உறுதியளித்திருந்தேன். எனினும், கடந்த இரண்டு தேர்தல்களிலும் சஜித் பிரேமதாச சில பின்னடைவுகளைச் சந்தித்தார். எனவே, நீதியான முறையிலும் தற்போதைய எதிர்க்கட்சிக் களநிலவரத்தைக் கருத்திற் கொண்டும், அவர் போட்டியிடுவதற்குப் பொருத்தமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்,” என்று குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button