News
4 கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ்பாணம் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று காலை கைது

4 கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ்பாணம் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய குறித்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



