News

யாரும் அவசரப்பட வேண்டாம் –  இன்னும் சற்று பொறுமையாக இருங்கள்…  3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்போம் ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்துள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜயகொடி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின்படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.


“அவசரப்பட வேண்டாம், இன்னும் சற்று பொறுமையாக இருங்கள். 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்போம் என்று எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.


நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
மேலதிக உதவி:

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button