News
தோட்டத் தொழிலாளர்களுக்கு தினமும் 2,000 ரூபா சம்பளம் வழங்க முடியும் ; ஜனாதிபதி வேட்பாளர் திலீத் ஜயவீர அறிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர், திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட ஆசன அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (02) வழங்கப்பட்டது.
அக்கட்சியின் தலைவரும், சர்வஜன வேட்பாளர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தோட்டப்புறத்தின் பாரம்பரிய அரசியல் முகாம்கள் உடைக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்