VIDEO > போரை நிறுத்துமாறு கோரியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு எதிராகவும் இஸ்ரேலில் நேற்றிரவு முதல் மக்கள் தொடர் போராட்டம்.

தொடர்ந்து நீடிக்கும் போர் கொள்கைகள் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு எதிராக சனிக்கிழமையன்று ஜெருசலேமில் நூற்றுக் கணக்கான இஸ்ரேலியர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
போரை முடிவுக்குக் கொண்டு வரவும், அரசாங்கத்தின் போக்கில் மாற்றங்களைக் கோரியும் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்களின் ஒரு பகுதியாக இது அமைந்தது.
“நிரந்தரப் போர்,” ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் மற்றும் பொதுமக்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மீதான மற்றும் ஈரான், ஹிஸ்புல்லாஹ் தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களின் அதிருப்தி ஆகியவற்றிற்கு மத்தியில், அமைதி மற்றும் அரசியல் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நோக்கில் குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் முன்னாள் சட்டமியற்றுபவர்களின் ஆதரவுடன் இந்த பேரணிகள் நடத்தப்பட்டன. https://youtu.be/m8T9SWTtWxc?si=_3e09fr0TDLCpSkw



