News
வீட்டில் 173 லீட்டர் எரிபொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊவா குடாஓய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே 95 லீற்றர் பெற்றோல் மற்றும் 78 லீற்றர் டீசல் ஆகியன எரிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண் இன்று (29) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது



