இந்த அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ, அதே போன்றுதான் தமிழ்நாட்டில் விஜய் யும் பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்துள்ளார்
இலங்கையிலுள்ள தற் போதைய அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ அதே போன்றுதான் தமிழ்நாட்டில் விஜயும் பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்துள்ளார்.
இறுதியில் அவருக்கு ஆட்சியை கொண்டுசெல்ல முடியுமாக இருக்குமோவென்று தெரியவில்லை’’ என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சாமர சம்பத் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
இப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக்கு விஜய் வந்துள்ளார். இவர் கச்சதீவை எடுத்துக்கொள்வாரோ தெரியாது. உங்களைப் போன்றுதான் விஜயும் பொய்களை அள்ளி வீசியுள்ளார். தங்கம் தருகிறேன், அதனைத் தருகின்றேன், இதனைத் தருகின்றேன் என்றெல்லாம் கூறியே விஜய் ஆட்சியைப் பெற்றுள்ளார்.
இங்குள்ள நிலைமையைப்போன்று விஜய்க்கும் தமிழ்நாட்டில் ஆட்சியை கொண்டுசெல்ல முடியுமாக இருக்குமோ தெரியவில்லை’’ என்றார்.


