News

“ரணவிரு செவன” நலன்புரி மையத்திற்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலன் விசாரித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (19) முற்பகல் ராகமவில் அமைந்துள்ள “ரணவிரு செவன” நலன்புரி மையத்திற்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலன் விசாரித்தார்.

இங்கு பாதுகாப்புப் படையினருடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர்கள் அனைவரும் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” நிலையத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிகிச்சை பெற்று வரும் படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button