News

ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக நான் முன்வைத்த (நா*ய்) குற்றச்சாட்டுகள் போலியானவை – என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ; சமகி ஜனபலவேகய உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பகிரங்கமாக அறிவிப்பு


2023 ஆம் ஆண்டில் ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்ட (போலியான) ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதை ஒப்புக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர, அசு மாரசிங்கவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்ட (போலியான) ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதை ஒப்புக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர, அசு மாரசிங்கவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

“கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக நீதிமன்றத்தில் அசு மாரசிங்கவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அதன்பிறகு, வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமரசத்திற்கு உடன்பட்டோம்,” என்று இன்று (19) ஊடகங்களிடம் பேசியபோது பிரேமச்சந்திர கூறினார்.

2023 ஆம் ஆண்டில் ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்ட (போலியான) ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதை ஒப்புக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர, அசு மாரசிங்கவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.”கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக நீதிமன்றத்தில் அசு மாரசிங்கவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அதன்பிறகு, வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமரசத்திற்கு உடன்பட்டோம்,” என்று இன்று (19) ஊடகங்களிடம் பேசியபோது பிரேமச்சந்திர கூறினார்.


2023 டிசம்பர் 23 அன்று, பெண் ஊடகவியலாளர் ஆதர்ஷா கரந்தன தங்களை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அலுவலகத்தில் சந்தித்ததாகவும், மாரசிங்க தனது செல்லப் பிராணியான நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, அதற்கான “ஆதாரமாக” ஒரு வீடியோவைக் காட்டியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
கரந்தன ஒரு ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வற்புறுத்தியதாகவும், அது சமகி வனிதா பலவேகயவின் பெண் உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பிரேமச்சந்திர கூறினார்.


இருப்பினும், அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் போலியானவை என்பதை மாரசிங்க தெளிவுபடுத்தியதாக பிரேமச்சந்திர தெரிவித்தார்.”இந்த பெண் தனிப்பட்ட பழிவாங்குவதற்கும், அசு மாரசிங்கவிற்கு தீங்கு விளைவிப்பதற்கும் செயல்பட்டுள்ளார் என்பதையும், அவர் எங்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
அதன் பிறகு தான் கரந்தனவை கண்டுபிடிக்க முயன்றதாகவும், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பிரேமச்சந்திர குறிப்பிட்டார். “அவர் நாட்டில் இருக்கிறாரா என்று கூட எங்களுக்குத் தெரியாது,” என்று அவர் கூறினார்.
பிரேமச்சந்திர மற்றும் மாரசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, தகராறு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button