News
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் நாமல் ராஜபக்ஷவே ; மகிந்த
அரகல போராட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு தோட்டாவையாவது பயன்படுத்தியிருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ச நாட்டை கட்டியெழுப்புவார் என தமக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாக மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக பெலியத்த நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் திரு நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மாலை 6:00 மணியளவில் அந்த இடத்தில் கல்வீச்சு காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.