இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்பினர் தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டனர் – இஸ்ரேல் படைகள் பெய்ரூட்டுக்குச் செல்லாது என ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே இடையேயான தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனானுக்குள் நீண்ட காலமாக இஸ்ரேல் படைகள் ஊடுருவியுள்ள நிலையில், நெதன்யாகுவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இஸ்ரேல் படைகள் “பெய்ரூட்டுக்குச் செல்லாது என்றும், அங்கு சென்று கொண்டிருந்த படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன” என்றும் ட்ரம்ப் கூறினார்.
“அனைத்துவிதமான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்றும், இஸ்ரேல் அவர்களைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது” என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ட்ரம்பின் இந்தச் செய்தியை வெளியிட்ட சில நேரங்களுக்குப் பிறகு, லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் கண்டறிந்து, வடக்கு இஸ்ரேலின் சில பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மக்களை பாதுகாக்கப்பட்ட இடங்களில் இருக்குமாறு எச்சரித்தது



