News

தடைகளுக்கு முகங்கொடுத்து படிப்படியாக நாட்டை முன்னேற்றி வருகிறோம் ; பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர

ஹஸ்பர் ஏ.எச்_

எந்த சவால்கள் வந்தாலும் முகங்கொடுத்து நாட்டை முன்னெடுத்து செல்வோம் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.  தம்பலகாமத்தில் இன்று (02) இடம் பெற்ற சமூக சக்தி வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் இந்த நாட்டை பொருத்தமட்டில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்  பொருளாதார சிக்கல்கள் எரிபொருள் பிரச்சினை மக்களது வாழ்க்கை சுமை என பல சவால்கள் காணப்பட்டன

.ஆனால் இதனை படிப்படியாக மாற்றி நாட்டில் ஊழல் மோசடி வீண் விரயம் இல்லாத மிகவும் சிறப்பான அரசியல் கலாசாரத்தை கொண்ட நாட்டினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் கட்டியெழுப்ப நாங்கள் கடமைப்பட்டிருந்தோம். 

இதனை தொடர்ந்து பாரிய திட்வா அனர்த்தத்துக்கும் முகங்கொடுத்திருந்தோம். இதனை மீட்க சிறப்பாக செயற்பட்டிருந்தோம்.
அதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட சவாலான போர் சூழல் பல மாதங்களாக நீடிக்கிறது. ஹோர்மூஸ் நீரினை மூடப்பட்டுள்ளதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரத்துக்கு  தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. 

எது எவ்வாறாயினும் இந்த சவால்களையும் தாண்டி ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றாக முன்னோக்கி செல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறோம். 2025ம் ஆண்டு வருடத்தை பொருத்தமட்டில் சிறப்பான வருடமாக தான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள வேண்டும். இரு மாதங்கள் திட்வா பாதிப்பாக இருந்தாலும் ஏற்றுமதி அந்நியச் செலவாணி சுற்றுலாத் துறை என பல பொருளாதார ரீதியான தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பிரதிபலனை கொண்டு செல்கின்றோம். எந்தவிதமான சவால்கள் வந்தாலும் அதனை தாண்டி நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல கடமைப்பட்டுள்ளோம்.
மூன்று வருடங்டளுக்கு முன்னர்எரிபொருள் வரிசை,பல மணி நேர மின்வெட்டுக்கள் காணப்பட்டன பல பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்பட்டன. 

பசளை இல்லாமல் மக்கள் நீண்ட தூரம் சென்று அதனை பெற்றனர்.ஒரு காலப் பகுதியில் ஒரு மூட்டை பசளையை ரூபா 40 ஆயிரத்துக்கு பெற்றதாக விவசாய தந்தை ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தான் நாட்டை பொருப்பெடுத்திருந்தோம். 

தற்போது படிப்படியாக கொண்டு செல்கின்றோம் ஆனாலும் சர்வதேச ரீதியான தாக்கம் சில வேலைகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும் மக்களுக்கான எந்த தடையுமின்றி வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் மின்சாரமோ பசளையோ எதுவாக இருந்தாலும் சில நேரங்களில் காலதாமதம் ஏற்பட்டாலும் விலை ஏற்றங்களுக்கு முகங்கொடுக்கலாம் இதனை மீட்டு மானியங்களை அதிகரித்து மக்களை கைவிட மாட்டோம். இதற்காக சிறந்த அரச உத்தியோகத்தர்கள் குழாம் சிறப்பாக இணைந்து செயற்படுகின்றனர். இதனால் மாற்றத்தை எதிர்பார்கலாம் என எதிர்பார்க்கிறோம். 

இந்த நாட்டில் இடை நிறுத்தப்பட்ட பல திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஆகவே எந்த சவால்கள் வந்தாலும் இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோம் என்றார்.


Hasfar A Haleem BSW (Hons)
Journalist

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button