News
VIDEO > இன்று காலை முச்சக்கரவண்டி மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் உள்ளிருந்த பாடசாலை மாணவன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழப்பு – மாப்பா கந்தையிலிருந்து நாவலப்பிட்டி சென்றவர்கள் உயிரிழந்த சோகம்

மாப்பாகந்தையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பெரிய யூக்கலிப்டஸ் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட மூவர் இன்று காலை (04) உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியின் ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து காலை 6:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விழுந்த மரத்தின் கீழ் சிக்குண்டிருந்த சடலங்களை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Video > https://www.youtube.com/live/2rxVKBlUfrc?si=eZalAj1bDxRfQDn1



