“கப்பலில் இருந்து இறக்கப்படும் விலைக்கே (CIF விலை) நுகர்வோருக்கு எரிபொருள் வழங்க முயற்சிப்போம்”
உலகச் சந்தைக்கும் உள்நாட்டுச் சந்தைக்குமான எரிபொருள் விலை இடைவெளியைக் குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாவையும் செலவிடுவதாகவும், அதற்காக ரூ. [வாக்கியம் முற்றுப்பெறவில்லை]
அதேபோன்று, எரிபொருள் விநியோக நிறுவனங்களும் குறிப்பிட்டதொரு பகுதியை ஏற்றுக்கொள்வதாகவும், விருப்பமில்லாவிட்டாலும் கூட ஒரு பகுதியை மக்கள் மீது சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ருவன் மாபலகம சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டைப் போன்று எரிபொருள் சந்தை வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்றும், ஒதுக்கீட்டின் (Quota) கீழ் வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



