News

2 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன்
தமிழ் மொழிபெயர்ப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு ரிவீவ் கமிட்டி கோரிக்கை

தடுத்துவைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன்
தமிழ் மொழிபெயர்ப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு ரிவீவ் கமிட்டி கோரிக்கை


சுமார் 2 வருடங்களுக்கு மேலாக சுங்கத் திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள புனித அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு ரீவிவ் கமெடியினால் (Review Committee) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த புனித அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புக்களை விடுவிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் இஸ்லாமிய நூல்களை மீளாய்வு செய்யும் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமிய நூல்களை மீளாய்வு செய்யும் குழுவினால் ஜூன் 13ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கை கடிதம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

( vidiyal )

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button