News

விசாரணைகள் நடைபெற்றுக் போதே கோட்டபாய, கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை கோரி உள்ளார்..   சில நேரங்களில் திருடனுக்கு முன்னரே வாழைக்குலை மதில் பாய்ந்த கதையாக இது இருக்கலாம், யாருக்குத் தெரியும்? அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்


ஊடகவியலாளர் கேள்வி ; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மிக விரைவில் கைது செய்யப் படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இன்றைய தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.


பதில்  (அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் – நளிந்த  ஜயதிஸ்ஸ


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து இன்னும் என்னிடம் தகவல்கள் இல்லை.


விசாரணைகள் வெளிப்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்தே அவர் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பாகும்.


விசாரணைகள் நடைபெறும் விதத்தைப் பார்க்கும் போது, தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைக் கொண்டு, அந்த விசாரணை தங்களை நோக்கித் திரும்பும் என்று ஒருவருக்குத் தோன்றலாம். எனவே, அதைப்பற்றி உண்மையில் எனக்குத் தெரியாது. அந்த விசாரணை சரியாகச் செல்லும் போது, தகவல்கள் வெளிப்படுத்தப்படுவது குறித்து அச்சத்தில் இருப்பவர்களுக்கே அது தெரியும்.


எனவே, அது அமைச்சரவையில் விவாதிக்கப்படும் ஒன்றல்ல. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
*(சிரிப்புடன்)* ஆனால் சில நேரங்களில் திருடனுக்கு முன்னரே வாழைக்குலை மதில் பாய்ந்த கதையாக இது இருக்கலாம், யாருக்குத் தெரியும்?

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button