இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா… போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றிக் கொண்டாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது இராஜிநாமா கடிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் போராட்டம் வெற்றிப் பெருமிதத்துடன் நிறைவடைந்துள்ளது.
நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்து ஜனதா கட்சியின் (சி.ஜே.பி) நிறுவனர் அபிஜித் தீப்கே கூறுகையில், “நாங்கள் சாதித்துவிட்டோம்! தர்மேந்திர பிரதான் இராஜிநாமா செய்துவிட்டார். அரசைக் கண்டு அச்சப்படாமல், தலைகுனியாமல் அமைதி வழியில் போராடினால் எவரையும் பணிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. இது மாணவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” எனத் தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சிஜேபி சார்பில் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து, சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில், மாணவர் குடும்பங்களுக்கான இழப்பீடு மற்றும் வழக்குகள் திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகள் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன



