News
பணவீக்கம் 6.8 சதவீதத்தில் இருந்து 7.3% ஆக உயர்வு !

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி கணக்கிடப்பட்ட 2026 ஜூலை மாதத்துக்கான பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த மதிப்பு 2026 ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
2026 ஜூலை மாதத்தில் உணவுப் பிரிவுக்கான பணவீக்க விகிதம் 6.3 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், 2026 ஜூன் மாதத்தில் அது 3.6 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
அதேபோல், 2026 ஜூலை மாதத்தில் உணவு அல்லாத பிரிவுக்கான பணவீக்க விகிதம் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், 2026 ஜூன் மாதத்தில் அது 8.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
இந்தப் பணவீக்க மதிப்புகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (31) மாலை வெளியிட்டது.



