News
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவர் – பேருந்து தீயில் முற்றிலுமாக எரிந்து நாசம் #கடுவெல

கடுவெல பிரதான பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு, இன்று அதிகாலை (05) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கடுவெல பொலிஸ் தெரிவித்தது.
கடுவெல-மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டதில், அப்பேருந்து தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
மேலும், பேருந்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல- கொள்ளுப்பிட்டி சேவை பேருந்துகள் இரண்டுக்கும் தீ விபத்தில் சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸ் கூறியது.



