News

VIDEO > நிறுத்தி வைக்கபட்டிருந்த சொகுசு பேருந்துக்கு அடையாளம் தெரியாத இருவரால் தீ வைக்கப்பட்ட காட்சிகளின் CCTV காட்சிகள்

கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை,  சொகுசு பேருந்து ஒன்றுக்கு, அடையாளம் தெரியாத இருவரால் தீ வைக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய தீவைப்புச் சம்பவத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

Video > https://www.facebook.com/share/v/19E6TeBNyK/


சந்தேகநபர்கள் இருவர் பேருந்தை நோக்கி நடந்து செல்வது, அதற்குத் தீ வைப்பது, பின்னர் அமைதியாக நடந்து செல்வது ஆகிய காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

https://www.facebook.com/share/v/19E6TeBNyK/


கடுவெல பொலிஸாரின் கூற்றுப்படி, வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில் அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தீவிபத்தில் சொகுசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல-கொல்லுப்பிட்டி வீதிச் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துகளும் சிறியளவில் சேதமடைந்துள்ளன.


தீப்பிடித்த போது, பாதிக்கப்பட்ட பேருந்திற்குள் அதன் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் இருந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் சந்தேகநபர்களைக் கண்டு எச்சரித்ததை அடுத்து, அவர்கள் காயமின்றி தப்பினர்.
இந்தத் தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button