ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தமிழர் செயற்படுவது முறை இல்லை… சிங்கள அரசை முஸ்லிம்கள் மீண்டும் நெருங்கி சிங்கள கட்சியிடம் கிழக்கை ஒப்படைத்து விட்டால், பின்னர் ஒப்பாரி வைக்க வேண்டாம் ; முபாறக் அப்துல் மஜீத் எச்சரிக்கை

ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் விரோத போக்கு காரணமாகத்தான் முஸ்லிம்கள் தம் பாதுகாப்புக்காக சிங்கள ராணுவத்தை ஆதரித்தனர். இப்போது யுத்தம் முடிந்து ஆயுதம் அழிந்த பின்னும் கல்முனையில் சில இனவாத தமிழர்கள் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை சீண்டுகிறார்கள்.
முஸ்லிம்களும் தமிழர்கள் என சொல்லிக்கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தமிழர் செயற்படுவது முறையா?
அப்படியானால் சிம்க்களவரின் இனவாதம் பரவாயில்லையே. அவனின் மொழியும் மதமும் வேறு. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் மொழி ஒன்று. இரண்டுமே இந்நாட்டின் சிறுபான்மை. இருவரும் அடிவாங்கியது சிங்களத்திடம்.
அப்படியிருந்தும் இன்னமும் புத்தி வரவில்லையா?
இச்செயல்கள் மீண்டும் சிங்கள அரசை முஸ்லிம்கள் நெருங்குவதற்கே வழி வகுக்கும்.
கிழக்கு மாகாண சபையிலும் சிங்கள அரச கட்சியே சிறந்தது என முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டி வரும்.
அப்போது முஸ்லிம்களை பார்த்து சிங்கள கட்சியிடம் கிழக்கை ஒப்படைத்து விட்டதாக ஒப்பாரி வைக்க வேண்டாம்.
இந்த உண்மையை தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
இலங்கை உலமா கட்சி.


