அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான :Dr. Shafi – The crusade for justice’ 16 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் வெளியீடு

Dr. Shfi – The crusade for justice’
சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான :Dr. Shafi – The crusade for justice’ எனும் தலைப்பிலான நூலின் வெளியீடு எதிர் வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.00 மணிக்கு கொழும்பு – 7, நெலும் பொக்குண மாவத்தையில் (கொழும்பு பொது நூலகம் அருகில்) அமைந்துள்ள மஹாவெலி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நூலை வளர்ந்து வரும் ஆங்கில மொழி எழுத்தாளர் அனீஷா அன்ஸார் மொழிபெயர்த்துள்ளார்.
ஷார்ஜா என்.எம்.சி மருத்துவ நிலைய வைத்தியர் அப்தாப் அமீர் அலி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஐ.நாவுக்கான முரண்பாட்டுத் தீர்வுகளுக்கான முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் சமித்த ஹெட்டிகே, சட்டத்தரணி அஷோக்பரன் நல்லையா குமரகுருபரன், சமூகச் செயற்பாட்டாளர்களான சிராஜ் மஷ்ஹூர், சமீரா மஹ்பூப்தீன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
உரைகள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் இடம்பெறவுள்ளன. வாய்ப்புள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.



