நீதிபதிகளின் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிப்பதால் நீதித்துறை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட மாட்டாது ; இளம் சட்டத்தரணிகள் சங்கம்

“நீதிபதிகளின் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நீதித்துறை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட மாட்டாது என இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
“நீதிபதிகளின் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் திருடர்கள் அல்லது ஏனைய குற்றவாளிகளைப் பிடிப்பதோ, அவர்களுக்கு தண்டனை வழங்குவதோ விரைவுபடுத்தப்படவும் மாட்டாது.” என அந்த சங்கம் கூறியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவு படுத்த ஒட்டுமொத்த சட்டத்துறையிலும் பரந்த அளவிளான மேம்படுத்தல் பொறிமுறை அவசியம் என என அந்த சங்கம் கூறியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவு படுத்த 100க்கும் அதிகமான நடவடிக்கைகள் இருக்கும் போது அதில் ஒன்றைக்கூட செய்யாமல் “நீதிபதிகளின் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தினை செய்யவுள்ளமை சந்தேகத்துக்குறியது என அவர் கூறினார்.



