News

மீனில் 🐠 ஊழல்? முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சகோதரர் கைது

இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மகிழ் சேனாரத்ன, லஞ்ச ஊழல் பற்றிய சாட்டியங்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (18) கைது செய்யப்பட்டார்.


நாடு முழுவதும் மீன் விற்பனை நிலையங்களை நிறுவுவதிலும் பராமரிப்பதிலும் உரிய கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மகிழ் சேனாரத்ன, 2010 முதல் 2012 வரை இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button