News

“கல்முனை ஆதார வைத்தியசாலையினால் பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதை பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது”

சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய
எதிர்க்கட்சி முஸ்லிம் எம்பிக்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினை இன்று (18) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தலையீடு செய்யுமாறு இதன்போது சுகாதார அமைச்சரிடம் கோரினர்

பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதை இப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தூதுக்குழுவினர் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததுடன், இவ்வாறான இடமாற்றம் நிரந்தரமான தீர்வல்ல என்பதையும் அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும், நியாயமான மதத் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் பொருத்தமான சீருடை ஏற்பாடுகளை அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் தூதுக்குழுவினருடன் ஏற்றுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் MLAM. ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹரூப், நிஸாம் காரியப்பர், MS. உதுமாலெப்பை, MS. அப்துல் வாசித், அஷ்ரப் தாஹிர்
மற்றும் NTM. தாஹிர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்:

விடியல்-

Recent Articles

Back to top button