வரவு செலவுத் திட்டத்தில் நிவாரண மழை..

2027 ஆம் ஆண்டிற்காக மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை (Budget) சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஊடாக மக்களுக்கு பெரும் நிவாரணப் பொதியை வழங்கிட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதில் குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களை இலக்கு வைத்து பல விசேட சலுகைகளை வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான வாழ்க்கைச் செலவைக் கணிசமாகக் குறைக்கும் பல யோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல பிரமாண்ட அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த ஆண்டில் தொடங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



