News
21 முதல் 43 வயதுக்குற்பட்ட பேஸ்புக் நண்பர்கள் இணைந்து தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்திய பார்ட்டி – பொலிஸார் முற்றுகையிட்டு அனைவரையும் கைது செய்தனர்

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு 36 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 41 பேரை கைது செய்துள்ளனர்.
தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா, ஹேஷ், ஐஸ் போதைப்பொருள், போதை மாத்திரைகள், சட்டவிரோத சிகரெட்டுகள், பியர் மற்றும் மதுபான போத்தல்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதுக்கும், பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்



