News
இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என அர்ச்சுனா MP வலியுறுத்தல்

இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

